Wednesday, August 17, 2016

மாவட்ட ரீதியில் முதல் நிலை 2015






2015-ஆம் வருட யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் கெடா, பீடோங்கைச் சேர்ந்த லாடாங் சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளி கோல மூடா மாவட்டத்தில் 1.29 அடைவு நிலையைப் பதிவு செய்து முதல் நிலை வகித்து உள்ளது.

இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் நாகேசன் உதயகுமார் 6 'ஏ' பெற்று பள்ளிக்குப் பெருமையைச் சேர்த்துள்ளார். இவரை அடுத்து இப்பள்ளியில் தனுஷா சந்திரு 4 'ஏ' பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாண்டு இப்பள்ளி கெடா மாநிலத்தின் தேர்ச்சி நிலை அடிப்படையில் மூன்றாவது நிலையை எட்டிப் பிடித்துச் சாதனை படைத்ததில் பள்ளியின் தலைமைத்துவம் பெருமிதம் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment