முத்தமிழ் விழாவில் சுங்கை புந்தார்
தமிழ்ப்பள்ளி முதல் நிலை
கடந்த 2016 மே மாதம் 11ஆம் தேதி கெடா மாநில கோலமூடா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு
இடையே நடைபெற்ற முத்தமிழ் விழாவில் சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளி மாணவன் வி.யசிதரன்
பேச்சுப் போட்டியில் முதல் நிலையில் வெற்றிப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான கையெழுத்துப் போட்டியில் ஐந்தாம்
நிலையில் மாணவன் கு.சர்வேஷன் வாகை சூடினார். இவர்கள் இருவரும் வரும் 28.5.2016இல் விக்டோரியா
தோட்டத் தமிழ்ப் பள்ளியில் நடைபெறும் மாநில அளவிலான முத்தமிழ் விழாவில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
குமாரி கோ சாந்தி தலைமையாசிரியராகப் பணிபுரியும் இப்பள்ளி மாணவர்களின்
சாதனை மிகவும் குறிப்பிடத்தக்கது. மாநில அளவிலான போட்டியிலும் தங்களின் வெற்றியை தக்கவைத்துக்
கொள்ளப் போவதாக மாணவன் யசிதரன் த/பெ விஜேந்திரன் உறுதி பூண்டுள்ளார்.
புதன் மே 25, 2016 05:39 PM
No comments:
Post a Comment