Wednesday, August 17, 2016

செம்மொழி

செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப் பழமை அடிப்படையிலும், பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் அந்த மொழி  வகைப் படுத்தப்படுகிறது. 


செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும் இருக்க வேண்டும். அதன் தோன்றல் மற்ற மொழிகளில் சார்ந்து இருக்காமல் இருக்க வேண்டும்.

உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை. அதனால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. 

ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானவை. இலக்கியத்தில் சிறந்து விளங்குபவை. அவற்றில் சில மொழிகளைச் செம்மொழிகள் என்று அடையாளப் படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment