Wednesday, August 17, 2016

மலேசியச் சுதந்திரத்திற்கு முன் தமிழ்ப்பள்ளிகள்


மலேசியச் சுதந்திரத்திற்கு முன் ஏராளமான தமிழ்ப்பள்ளிகள் தோட்டப்புறத்திலேயே நிறுவப்பட்டன. கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்களால் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் பட்டணங்களில் தொடங்கப்பட்டன. கற்றல் கற்பித்தல் தொடர்பான அனைத்தும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டன. ஆசிரியர்களும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டனர்.

19 ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி

தமிழ் மற்றும் சீனக் குழந்தைகளுக்குத் தாய்மொழிக்கல்வி அளிப்பது தம் கடமையல்ல என அரசாங்கம் கருதியது. எனவே, சில தனியார் நிறுவனங்களின் முயற்சியினால் தமிழ்ப்பள்ளிகள் சில தோன்றின.

சான்று:
1816இல் பினாங்கு ஃபிரி ஸ்கூலில் (Penang Free School) தமிழ் கற்பிக்கப்பட்டது.
1834இல் சிங்கப்பூர் ஃபிரி ஸ்கூலில் தமிழ்க்கல்வி
1850இல் மலாக்காவில் ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி
1859இல் சிங்கப்பூர் அர்ச் பிரான்சிஸ் சேவியர் மலபார் பள்ளி
1859இல் மலாக்காத் திரங்கேரா பள்ளியிலும் தமிழ் கற்பிக்கப்பட்டது.
1869இல் மாதர் விதிலிய இடைநிலை சமையப் பள்ளி
1875இல் வெல்லெஸ்லி மாநிலம் த்தில் தோட்ட நிர்வாகியின் ஆதரவில் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது.
1895இல் ஆண்களுக்காகக் கோலாலும்பூர் ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி (தவத்திரு ஆபிரகாம்) தொடங்கி நடத்தினார்.

விடுதலைக்கு முந்தைய தமிழ்க்கல்வி

20ஆம் நூற்றாண்டுகளில் அரசாங்கம் தமிழ்க்கல்வியில் நாட்டம் செலுத்தத் தொடங்கியது.

சான்று:
1900 - பேராக் மாநிலக் கிரியான் மாவட்டத்தில் பாகான் செராயில் கட்டப்பட்ட தமிழ்ப்பள்ளி (முதல் அரசாங்க தமிழ்ப்பள்ளி) (Sir Frank Swettenham)
1900 - நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சில அரசினர் தமிழ்ப்பள்ளி
1906 - கோலாலம்பூரில் தம்பு சாமி தமிழ்ப்பாடசாலை
1910 - விவேகாந்தர் தமிழ்ப்பள்ளி
1937 - அப்பர் தமிழ்ப்பள்ளி
1956 - 902 தமிழ்ப்பள்ளிகள்

1902லிருந்து ஆங்கிலேயர்கள் தமிழ்ப்பள்ளிக்கூடங்களைத் தோட்டப்புறங்களிலும் நகரங்களிலும் நிறுவ வசதி செய்து கொடுத்தனர். ஆரம்பத்தில் இரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுப் பணி ஊழியர்களின் குழந்தைகள் மட்டுமே பள்ளிகளில் பயில அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர், 1925 ஆம் ஆண்டு, தொழிற்சங்கம் தோட்டங்களில் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. அதாவது, ஒரு தோட்டத்தில் 10 மாணவர்கள் இருந்தால், ஒரு பள்ளிக்கூடத்தையும் அதற்கான ஆசிரியர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அரசாங்கத்தால், பள்ளிக்கு இலவச பண உதவி வழங்கப்பட்டது. அப்பணம், தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குப் பரிசை பணமாக வழங்கப்பட வேண்டும்.

1930 ஆம் ஆண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு ஓர் அமைப்பாளர் பாடத் திட்டங்களின் போதனா முறைகளையும் தமிழ்ப் பள்ளியின் நிலவரங்களையும் கண்காணிக்க நியமிக்கப் பட்டார்.

இதனால் தோட்டப்புறங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் படிப்பறியாமை ஒழிக்கப் பட்டது. இருப்பினும் ஆங்கிலேயர்களின் ஆட்சித் திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளின் கல்வித் திட்டம் மூன்று இனங்களுக்கிடையே இடைவெளியை உண்டாக்கியது.

No comments:

Post a Comment