தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பல கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலர் கூறுகின்றனர்.
இச்சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முதன்மையானவர்.
இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி... பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து... பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார்.
தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள் மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப் பக்கமாகத் தமிழ் – தமிள – த்ரமிள – த்ரமிட - த்ரவிட ஆகியது எனச் சிலர் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment