Wednesday, August 17, 2016

செம்மொழித் தகுதி

ஒரு மொழிக்குச் செம்மொழி என்ற தகுதி அந்த மொழியில் இடம் பெற்று இருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில் தான் முடிவு செய்யப் படுகிறது. 


இருப்பினும் செம்மொழி என்பதற்கு அந்த மொழியில் இடம் பெற்று இருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் தேவை.
  • இலக்கியப் படைப்புகள்
  • கலைப் படைப்புகள்

இந்த இரு படைப்புகளைக் கொண்டே அந்த மொழி செம்மொழிகளாக அறிவிக்கப் படுகின்றன.

திராவிட மொழிகளில் முதலாவதானது தமிழ். 
6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது. 

ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம், இலத்தீன் மொழிகள் போல் இந்திய வரலாற்றை அறிய தமிழ், சமஸ்கிருதம் மொழிகள் தேவையாக உள்ளன. 

தமிழின் செம்மொழித் தகுதிக்கு திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்ற பல நூல்கள் சான்றுகளாய் உள்ளன.

No comments:

Post a Comment